×

மேட்டுப்பாளையத்தில் குடிநீர் விநியோகம் சீராக இல்லை; பவானி ஆறு ஓடியும் பயனில்லை என மக்கள் வேதனை...!!!

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் குடிநீர் விநியோகம் சீராக இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளில் ஒன்றான மேட்டுப்பாளையத்தில் 33 வார்டுகள் உள்ளன. வற்றாத ஜீவ நதியான பவானி ஆறு இப்பகுதி வழியாக ஓடி வருகின்ற போதிலும், குடிநீர் விநியோகம் சரிவர நடைபெறுவதில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், துப்புரவு பணியாளர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை என்பதால் பல்வேறு இடங்களில் குப்பைகள் தேங்கி கிடப்பதாகவும் கூறுகின்றனர். சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருப்பதால், இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் மேட்டுப்பாளையம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அப்பகுதி மக்கள் செய்தியாளர்களிடம் பேசிய போது, இப்பகுதியில் தண்ணீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. குடிநீர் தான் இங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதியாக தேவைப்படுகிறது; ஆனால், குடிநீரோ 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருகிறது. எனவே குடிநீர் தேவையை பூர்த்தி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் சாலைகள் மோசமாகவும், குண்டும் குழியுமாகவும் உள்ளதால் போக்குவரத்தில் மிகுந்த சிரமம் உள்ளது என தெரிவித்தனர். மேட்டுப்பாளையத்தில் 15 வார்டுகள் இருந்தபொழுது 250 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றினார்; ஆனால் தற்பொழுதோ, 80 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர் என தெரிவித்தனர்.

Tags : Bhavani river , Mettupalayam, drinking water, Bhavani river, useless, people, pain
× RELATED தட்டு காணிக்கை கையாடல் விவகாரம்;...