×

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்காக வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை; ரெப்போ வட்டி 4%-ஆக தொடரும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு

மும்பை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்காக வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார். குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 4%-ஆக தொடரும் எனவும் கூறியுள்ளார். வீடு, வாகனம் கடன்களுக்கான வட்டிவிகிதம் அதே நிலையிலேயே நீடிக்கும். பணப்புழக்கத்தை தற்போதைய நிலையிலேயே வைத்திருக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். அதேபோல் ரிசர்வ் வங்கியில் வங்கிகள் செய்யும் டெபாசிட்டுக்கான வட்டி விகிதமும் 3.25%-ஆக தொடரும் என கூறப்பட்டுள்ளது. உணவு பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறுகிய கால கடன்களுக்காக வட்டி விகிதம் மற்றும் பணப்புழக்கம் தொடர்பான கொள்கைகளில் எந்தவிதமான மாற்றமும் இப்போதைக்கு தேவையில்லை என ரிசர்வ் வங்கியில் வல்லுநர் குழு கூறியுள்ளது.

வல்லுநர் குழு மும்பையில் ஆலோசனை நடத்தி அதன் அடிப்படையிலேயே இந்த அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ளார். தற்போது பணவீக்கம் அதிகரித்து கொண்டிருக்கிறது என்ற நிலையிலே வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே அமெரிக்காவில் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோன்ற நிலைப்பாட்டை சில ரிசர்வ் வங்கிகளும் முன் எடுக்கும் என கருதப்பட்ட நிலையில் தான் மும்பையில் நடந்த ஆலோசனையில் அப்படிப்பட்ட எந்த நடவடிக்கையும் தற்போதைக்கு எடுக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் மற்றும் கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதாரம் கொஞ்சம் மீண்டு வந்தாலும் அது மீண்டும் பாதிக்கப்படாது என்ற எந்த உத்தரவாதமும் இல்லை எனபதே காரணம் என கூறப்படுகிறது.

ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு அடுத்த உருமாற்றம் வீரியமிக்கதாக இருக்கும் என கொரோனா குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை  என்று சொல்லக்கூடிய நிலை தற்போது இல்லை. ஆகவே பொருளாதார வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி ஊக்கம் அளிப்பது மிகவும் முக்கியமாக இருப்பதால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும் இப்போது அது தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போதைய முக்கியமான முன்னுரிமை வளர்ச்சியை ஊக்குவிப்பதே, அதற்காக வட்டி விகிதங்களை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் பணபுழக்கத்தை இப்போதைய நிலையிலேயே தொடர வேண்டும் என ரிசர்வ் வங்கி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Reserve Bank ,RBI ,Governor ,Shakti Kantha Das , The Reserve Bank, at interest rates, remained unchanged
× RELATED தனியார் நிதி நிறுவனங்களிடம் முதலீடு...