×

என்றாவது ஒரு நாள் காவிக்கொடி தேசியக் கொடியாக மாறும் : பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா பேச்சால் சர்ச்சை

டெல்லி : தேசியக் கொடி கம்பத்தில் காவிக்கொடியை ஏற்றியதில் என்ன தவறு என்று கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களுருவில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பாவிடம் இந்துத்துவா அமைப்பு மாணவர்கள், தேசியக் கொடி கம்பத்தில் காவி கொடி ஏற்றியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், அது ஒன்றும் சர்ச்சைக்குரிய விஷயம் அல்ல. நாடு முழுவதும் இந்துத்துவா குறித்து விவாதம் நடக்கிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முடியுமா என்று சிரித்தார்கள். கட்டவே முடியாது என்றார்கள். ஆனால் கட்டிக் காண்பித்துள்ளோம்.

அதே போல், 100 வருடங்கள் கழித்து 200 வருடங்கள் கழித்து அல்லது 500 வருடங்கள் கழித்து என்றாவது ஒரு நாள் காவிக் கொடி தேசியக் கொடியாக மாறும். எனக்கு சரியாக தெரியவில்லை.அனைத்து இடங்களிலும் காவிக் கொடி பட்டொளி வீசி பறக்கக்கூடும், என்றார். அதே போல கர்நாடக மின்சாரத்துறை அமைச்சர் சுனில் செய்தியாளர்களிடம் பேசிய போது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டால் இந்துக்களும் ஹிஜாப் அணிய வேண்டும் என சட்டம் போட்டு விடுவார்கள் என பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமைச்சர்கள் ஈஸ்வரப்பா மற்றும் சுனில் பேச்சுகளுக்கு கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.


Tags : BJP ,minister ,Eeswarappa , National Flag, Karnataka, Minister, Eeswarappa
× RELATED கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர்...