×

சென்னை திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. ஒருவர் கைது!

சென்னை  : சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயம், சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சியினர், மூத்த நிர்வாகிகள் வந்து செல்வதால் கமலாயம் களைகட்டி இருந்தது.

இந்த நிலையில் நேற்றிரவு அந்த அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அடையாளம் தெரியாத சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள், அடுத்தடுத்து 3 மது பாட்டில்கள் மூலம் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியுள்ளனர். நல்வாய்ப்பாக இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் நேரிடவில்லை. பெட்ரோல் குண்டு வீச்சை அடுத்து உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேரமா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது ஒருவர் கமலாயம் முன்பு பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வினோத் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் இன்னும் வெளியிடவில்லை. நீட் தேர்வுக்கு ஆதவராக பாஜக செயல்படுவதை எதிர்க்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கைதான வினோத் கூறியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : Bajaka Chief Office ,Chennai ,Dinagar ,Kamalalayam , பாரதிய ஜனதா கட்சி,பெட்ரோல், குண்டு வீச்சு,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...