×

வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலுக்கு கழுகுகள் மீண்டும் வர வேண்டி 1008 பால் குட அபிஷேகம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் மலைக்கோயிலுக்கு கழுகுகள் மீண்டும் வர வேண்டி வேதகிரீஸ்வரருக்கு 1008 பால் குட அபிஷேகம்  நடந்தது. பட்சி தீர்த்தம், கழுக்குன்றம், வேதமலை என்றழைக்கப்படும் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலுக்கு, பல ஆண்டுகளுக்கு முன், தினமும் 2 கழுகுகள் வந்து கொண்டிருந்தன. திடீரென கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த கழுகுகள் வருவதில்லை. இதனால், பக்தர்கள் மிகவும் வேதனையில் இருந்தனர். இதை தொடர்ந்து கழுகுகள் மீண்டும் வர வேண்டும் என பிரார்த்தனை செய்து, திருக்கழுக்குன்றம்  வேதமலை குழு மற்றும் அகஸ்திய கிருபா அமைப்பினர் சார்பில், வேதகிரீஸ்வரருக்கு 1008 பால் குட அபிஷேக விழா அகஸ்திய கிருபா அன்புசெழியன் தலைமையில் நேற்று நடந்தது. முன்னதாக தாழக்கோயில் வளாகத்தில் இருந்து 1000க்கும் மேற்பட்ட பெண்கள், தங்களது தலையில் பால் குடங்களை சுமந்து கொண்டு 623 படிக்கட்டுகள் கொண்ட மலை மீது ஏறி, மலை மீதுள்ள வேதகிரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை திருக்கழுக்குன்றம் கோயில் செயல் அலுவலர் குமரன் செய்ந்தார்.

Tags : Vedagriswarar hill temple , 1008 milk jug anointing for eagles to return to Vedagriswarar hill temple
× RELATED வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் 1008 சங்காபிஷேகம்