திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகம்: க.சுந்தர் எம்எல்ஏ அறிமுகம் செய்தார்

செய்யூர்: செய்யூர் வட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சியின் 21 வார்டுகளில், போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் கடப்பக்கத்தில் நேற்று நடந்தது. காஞ்சி தெற்கு திமுக மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். பேரூராட்சி செயலாளர் இனியரசு வரவேற்றார். காங்கிரஸ் நிர்வாகி முத்துக்குமார், ஓ.வி.ஆர்.ரஞ்சித், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்ட செயலாளர் ரவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் சூ.க.ஆதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் காஞ்சி தெற்கு திமுக மாவட்ட செயலாளர் க.சுந்தர், வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்பது நாடாளுமன்ற தேர்தலோ, சட்டமன்ற தேர்தலோ கிடையாது. வேட்பாளர்கள் அனைவரும் ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து, நமது சின்னங்களுக்கு வாக்களிக்கும் அளவுக்கு வாக்காளர்களை கவர வேண்டும். கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஒன்றிணைந்து 21 வார்டுகளிலும் வாக்குகளை சேகரித்து திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்’ என்றார். இதில், சித்தாமூர் ஒன்றியக்குழு தலைவர் ஏழுமலை, ஒன்றிய செயலாளர்கள் சிற்றரசு, எம்.எஸ்.பாபு, பேரூர் துணை செயலாளர் மோகன்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: