திருத்தணி முருகன் கோயிலில் தை கிருத்திகை விழா

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் நேற்று தை கிருத்திகைவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் காவடி எடுத்து வந்து பிரார்த்தனை நிறைவேற்றினர். பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருத்தணி முருகன் கோவிலில் தைகிருத்திகை விழாவை ஓட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைரஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:00 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று தை கிருத்திகை என்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் வந்து மூலவரை தரிசித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இதுதவிர மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பொதுவழியில் 4 மணி நேரம் நீண்டவரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். கட்டண தரிசனத்தில் 2 மணி நேரம் வரை வரிசையில் சென்று தரிசனம் செய்தனர். திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில், 60க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: