தோற்றத்தை கிண்டலடித்த விவகாரம் நெட்டிசன்களை முட்டாள்கள் என விமர்சித்த காஜல் அகர்வால்

சென்னை: நடிகை காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் தனது போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அவரது தோற்றத்தை பார்த்து சிலர் கிண்டலடித்தனர். இதுபற்றி காஜல் கூறியது:

 சில பாடி ஷேமிங் கிண்டல்கள் மற்றும் மீம்ஸ்கள் என்னை எதுவும் செய்யமுடியாது. அன்பாக இருக்க கற்றுக்கொள்வோம், அது மிகவும் கடினமாக இருந்தால், வாழ்வோம் வாழவிடுவோம். இதுபோன்ற சூழ்நிலைகளை சந்திப்பவர்களுக்கு என்னுடைய யோசனைகள் எதையும் புரிந்து கொள்ளாமல் தங்களை பற்றி மட்டுமே யோசிக்கும் சில முட்டாள்களும் கண்டிப்பாக இதை படிக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் நம் உடல், எடை அதிகரிப்பு, முகத்தில் சோர்வு என மாற்றங்கள் ஏற்படுவது சகஜம். ஹார்மோன் மாற்றங்களால் குழந்தை வளரும்போது நம் வயிறு மற்றும் மார்பகங்கள் பெரிதாகி, நம் உடல் பாலூட்டுவதற்கு தயாராகிறது. சிலருக்கு உடல் பெரிதாகும் இடத்தில் ஸ்ட்ரெச் மார்க்ஸ் உருவாகலாம். சில சமயங்களில் நமது முகங்களில் பருக்கள் தோன்றலாம். நாம் வழக்கத்தைவிட மிகவும் சோர்வாகவும் நேரிடும். மேலும், பிரசவத்திற்குப் பிறகு, நாம் முன்பு இருந்த அழகை திரும்பப்பெற சிறிது காலம் ஆகலாம் அல்லது கர்ப்பத்திற்கு முன்பு நாம் இருந்த உருவத்தை நம்மால் திரும்பப் பெற முடியாமலேயே போகலாம். இது எல்லாம் தெரியாத முட்டாள்கள் இருக்கிறார்கள். அவர்களை திருத்த முடியாது. இவ்வாறு காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

Related Stories: