×

பாடகியுடன் பிரேம்ஜி காதல்

சென்னை: பாடகி வினய்தாவை காதலிக்கிறார் நடிகர் பிரேம்ஜி. சென்னை 28, சரோஜா, கோவா, பிரியாணி, மாநாடு, கசட தபற உள்பட பல படங்களில் நடித்தவர் பிரேம்ஜி. இவர் இசையமைப்பாளரும் கூட. கில்லாடி, ஆதலால் காதல் செய்வீர் உள்பட பல படங்களில் பின்னணி பாடியவர் வினய்தா. பிரேம்ஜியும் வினய்தாவும் கடந்த சில மாதங்களாக காதலித்து வருகின்றனர். 42 வயதாகும் பிரேம்ஜி, திருமணம் செய்யாமல் இருந்தார். இந்நிலையில் அவர் வினய்தாவை கரம் பிடிப்பார் என சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் பிரேம்ஜியுடன் இருக்கும் புகைப்படத்தை வினய்தா வெளியிட்டு, ‘உன் பார்வையால் என்னை பிடித்துக்கொண்டு இருக்கிறாய். இருட்டில் உன்னுடன் என் கைகளுக்கு இடையில் நடனமாடுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Premji , Premji falls in love with the singer
× RELATED பிரேம்ஜிக்கு ஜூன் 9ல் திருமணம்