ஆலந்தூர் 166வது வார்டில் சமுதாய கூடம் கட்டி தருவேன்: திமுக வேட்பாளர் என்.சந்திரன் உறுதி

ஆலந்தூர்: ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளர் என்.சந்திரன் ஆலந்தூர் 166வது வார்டு திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் நேற்று தனது வார்டுக்கு உட்பட்ட பழவந்தாங்கல் டீச்சர்ஸ் காலனி, ரகுபதி நகர், பர்மா காலனி போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர், `மழை வெள்ளம், கொரோனா காலங்களில் கட்சி நிர்வாகிகளுடன் ஒடோடி வந்து உதவி செய்துள்ளேன். என்ன வெற்றிபெற செய்தால் அரசின் திட்டங்கள் அனைத்தையும் நமது பகுதிக்கு கொண்டு வருவேன். பழவந்தாங்கல் பர்மா காலனியில் சமுதாய கூடம், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு புதிய கட்டிடம் போன்றவை கட்டித்தர நடவடிக்கை எடுப்பேன்’ என்றார்.

இந்த வாக்கு சேகரிப்பின்போது 166வது வட்ட பொறுப்பாளர் இ.உலகநாதன், மாவட்ட பிரதிநிதி மாவட்ட மகளிரணி துணை செயலாளர் பாண்டிச்செல்வி வெள்ளைச்சாமி, வேல்முருகன், கேபிள் ராஜா, விக்கி, செல்வம், மாரிமுத்து, வேல்முருகன், துணைசெயலாளர், நா.வீரமணி ஆனந்தராவ், லத்தீப், சரவணன், மணிவண்ணன், சேகர், ஆட்டோ சங்கர், செய்யது அபுரார், மகளிரணி விஜயலட்சுமி, ஆண்டாள், மித்ரா, காங்கிரஸ் சார்பாக வட்ட தலைவர் சி.கே.ஏழுமலை, தேவராஜ், சீனிவாசன் மதிமுக சார்பாக ஜெயச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் சார்பாக தொகுதி துணை செயலாளர் சி.வெற்றி, மகேஷ், பாலாஜி செல்வராஜ், செய்யது அலி, பிரதாப், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: