சிபிஎஸ்இ 2ம்கட்ட தேர்வு ஏப்ரல் 26ல் தொடக்கம்

சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 26ம் தேதி முதல் தொடங்க உள்ளன. இதற்கான அட்டவணைகள் விரைவில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவியத்தை அடுத்து, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை இரண்டகட்டமாக நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்து அறிவித்தது.

அதன்படி, முதற்கட்ட தேர்வுகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து இரண்டாம் கட்ட தேர்வுகள் ஏப்ரல் 26ம் தேதி முதல் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. அதற்கான அட்டவணை விரைவில் வெளியிடவும் சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. முதற்கட்ட தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் அதன் விடைத்தாள்களை திருத்தும் பணியும் விரைவில் தொடங்க உள்ளன. விடைத்தாள்கள் அந்தந்த பள்ளிகளில் திருத்தப்படுமா, அல்லது சிபிஎஸ்இ நிர்வாகமே திருத்த ஏற்பாடு செய்யுமா என்பது குறித்தும் விரைவில் அறிவிக்க உள்ளது.

Related Stories: