குலசேகரம் அருகே பரபரப்பு: 2 நாள் வீட்டில் அடைத்து வைத்து 9ம் வகுப்பு மாணவி பலாத்காரம்

மார்த்தாண்டம்: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்ைத அடுத்த ெபான்மனை அருகே உள்ள ஒரு கிராமத்ைத ேசர்ந்த தம்பதிக்கு 14 வயதில் மகளும், 12 வயதில் மகனும் உள்ளனர். மகள் அருகில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்று வருவது வழக்கம். நாகர்கோவில் அருகே தெற்கு சூரங்குடி கீரிவிளையை சேர்ந்தவர் சுந்தரலிங்கம். அவரது மகன் வினோத். டிரைவர். கடந்த மாதம் 4ம் தேதி சிறுமி படிக்கும் பள்ளி அருகே சவாரிக்கு வந்துள்ளார்.

அப்போது சிறுமியை பார்த்து சிரித்து, கையசைத்து மெதுவாக பேச்சு கொடுத்து உள்ளார். பின்னர் சிறுமியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2ம் தேதி வினோத் சிறுமியை பின்தொடர்ந்து வந்து, ஆசை வார்த்தைகள் பேசி காதலிப்பதாக கூறி உள்ளார். மேலும் சிறுமியும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி அவரை சம்மதிக்க வைத்து உள்ளார். தொடர்ந்து 2 பேரும் நேரில் சந்தித்தும், ெசல்போனில் பேசியும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 6ம் தேதி, சிறுமியை பொன்மனை சந்திப்புக்கு வருமாறு வினோத் அழைத்துள்ளார். இதனால் சிறுமி தனது பாட்டி வீட்டுக்கு செல்வதாக வீட்டில் பொய் கூறிவிட்டு, காதலன் அழைத்த இடத்துக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து, நாம் 2 பேரும் தனியாக பேசலாம்; என்னுடன் வா என வினோத் சிறுமியை அழைத்து பஸ்சில் தெங்கம்புதூருக்கு கூட்டி சென்றுள்ளார். பின்னர் சாஸ்தான் கோவில்விளையில், வினோத்தின் நண்பன் ராஜூ வாடகைக்கு எடுத்து வைத்திருந்த வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு சிறுமியை திருமணம் ெசய்து ெகாள்வதாக ஆசை வார்த்ைத கூறி, வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரை அங்கு அடைத்து வைத்து 2 நாட்கள் தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து உனக்கு 18 வயது நிறைந்ததும் நான் திருமணம் செய்து கொள்வேன் என கூறி, பஸ் ஏற்றி பொன்மனைக்கு அனுப்பி வைத்துள்ளார். வீட்டுக்கு வந்த சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் தென்பட்டதாலும், மிகவும் சோர்வாக இருந்ததாலும் அவரிடம் தாயார் விசாரித்துள்ளார்.

பலமுறை வற்புறுத்தலுக்கு பிறகு சிறுமி நடந்த சம்பவத்தை தாயாரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்தவர், மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான வினோத்தை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: