×

பெருங்குடி 186 வது வார்டில் அடிப்படை வசதி செய்வேன்: திமுக வேட்பாளர் வாக்குறுதி

ஆலந்தூர்: பெருங்குடி 186வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்துதருவேன் என்று திமுக வேட்பாளர் மணிகண்டன் வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தார். சென்னை பெருங்குடி மண்டலம் 186வது வார்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் ஜெ.கே.மணிகண்டன் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றார். அவர் இன்று, பாதாள வினாயகர் கோயில் தெரு, பகத்சிங் தெரு, முத்து முகம்மது தெரு, ஜோதிராமலிங்கம் தெரு, அண்ணாமலை தெரு பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர், ‘’என்னை வெற்றிப்பெற செய்தால் இந்த பகுதியில் தரமான சாலைகள் அமைத்து தருவேன்.

புதிய தொழில்நுட்ப மின்சார டிரான்ஸ்பார்மர் அமைத்து தர நடவடிக்கை எடுப்பேன். அரசு திட்டங்கள் அனைத்தையும் இந்த பகுதிக்கு கொண்டு வருவேன். பாதுகாக்கபட்ட குடிநீர், மழைநீர் கால்வாய் வசதி, நூலகம் ஏற்படுத்தி தருவேன்’ என்றார். வாக்கு சேகரிப்பின்போது  வட்ட திமுக பொறுப்பாளர் குமாரசாமி, வழக்கறிஞர் கமலநாதன், முன்னாள் கவுன்சிலர் புனிதன் ஜனார்த்தனன், ராமமூர்த்தி, லட்சுமணன், சு.ப.சரவணன், கோட்டீஸ்வரன், மகேஸ்வரன், குபேரா, யோகராஜன்,  மணிகண்டன்,  ரகுபதி, பி.எம்.தினேஷ், மதுசூதனன், ரமேஷ், முரளி, பாண்டு, மகளிரணி சங்கீதா, காங்கிரஸ் வட்டார தலைவர் லோகநாதன், வட்ட தலைவர் குமார், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Colangudi ,Pimugha , I will do basic facilities in Perungudi 186th Ward: DMK candidate promises
× RELATED பெருங்குடி குப்பை கிடங்கு கழிவுகளால்...