மெச்சத்தக்க வகையில் பணி செய்த நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளருக்கு நட்சத்திர காவல் விருது: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்

சென்னை: ஜனவரி மாதம் மெச்சத்தக்க வகையில் பணி  செயத்தற்காக நட்சத்திர காவல் விருது நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர் கந்தவேலுவுக்கு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்.

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் லோகநாதன் தலைமையிலான குழு ஒவ்வொரு மாதமும் தீவிரமாக ஆராய்ந்து, சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாகவும், மெச்சத்தக்கவகையிலும் பணி செய்யும் காவல் அதிகாரி அல்லது காவலர்களை கண்டறிந்து அவர்களது சிறப்பான பணியினை மதிப்பிட்டு மாதத்தின் நட்சத்திர காவல் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருதுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.5 ஆயிரம் பண வெகுமதியுடன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் வண்ணாரப் பேட்டை காவல் மாவட்ட நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் கந்தவேல், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்தும், குற்றப்பின்னணி நபர்கள், சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து முக்கிய தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவரின் தகவலால் பல அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, சிறப்பாக பணியாற்றிய நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர் கந்தவேலுவுக்கு ஜனவரி மாதத்தின் நட்சத்திர காவல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைதொடர்ந்து, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று காவல் ஆய்வாளர் கந்தவேலுவை நேரில் அழைத்து ரூ.5 ஆயிரம் வெகுமதி வழங்கி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மேலும், 9,10 ஆகிய தேதிகளில் பிறந்தநாள் கொண்டாடும் 43 காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories: