×

இலங்கைக்கு எதிரான தொடர் திடீர் மாற்றம் மொகாலியில் கோஹ்லியின் 100 வது டெஸ்ட் போட்டி: பெங்களூரு ரசிகர்கள் ஏமாற்றம்

மும்பை: இலங்கை கிரிக்கெட் அணி  இந்த மாதஇறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 டி.20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஏனெனில் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லிக்கு இது 100வது டெஸ்ட் போட்டியாகும். ஐபிஎல்லில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக 14 ஆண்டுகளாக கோஹ்லி ஆடி வருவதால் அவரது சொந்தமைதானம் போல் சின்னசாமி ஸ்டேடியம் உள்ளது. அங்கு ரசிகர்கள் முன்னிலையில் தனது 100வது டெஸ்ட்டை ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் போட்டி அட்டவணை திடீரென மாற்றப்பட்டுள்ளது. முதலில் டி.20 தொடர் நடைபெற உள்ளது.

முதல் டி.20 போட்டி லக்னோவில் பிப்.24ம் தேதியும், அடுத்த 2 போட்டிகள் முறையே பிப்.26,27ம் தேதிகளில் தர்மசாலாவிலும் நடைபெற உள்ளது. தொடர்ந்து முதல் டெஸ்ட் மார்ச் 3ம் தேதி முதல் 7ம்தேதி வரை மொகாலியில் நடைபெறுகிறது. 2வது டெஸ்ட் மார்ச் 12-16 வரை பெங்களூருவில் நடைபெற உள்ளது. கோஹ்லி தங்கள் மண்ணில் 100வது டெஸ்ட்டில் ஆடுவார் என பெங்களூரு ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர். 2வது டெஸ்ட் பகல்-இரவு டெஸ்ட் ஆகுமா இல்லையா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை,இது குறித்து பிசிசிஐ நிர்வாகமோ அல்லது கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கமோ எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் தெரிவிக்கவில்லை. இந்த தொடரில் இருந்து ரோகித்சர்மா டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Kohli ,Mogali ,Bangalore , Kohli, 100th Test match in Mogali, Sri Lanka
× RELATED சதம் விளாசினார் கோஹ்லி ஆர்சிபி 183 ரன் குவிப்பு