×

விழுப்புரத்தில் பறக்கும்படை சோதனை 75 பவுன் ஜிமிக்கி கம்மல், சிக்கியது

* வாக்காளர்களுக்கு கொண்டு செல்லப்பட்டதா?
* தேர்தல் அதிகாரிகள் விசாரணை

விழுப்புரம் : விழுப்புரத்தில் பறக்கும் படை சோதனையில் 75 பவுன் ஜிமிக்கிகம்மல், தாலிச்சரடு பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம்  மாவட்டத்தில், விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் நகராட்சிகள்  மற்றும் வளவனூர், செஞ்சி, அனந்தபுரம், திருவெண்ணெய்நல்லூர், விக்கிரவாண்டி,  மரக்காணம் ஆகிய 7 பேரூராட்சிகளில் 210 கவுன்சிலர் பதவிகளுக்கான நகர்ப்புற  உள்ளாட்சித் தேர்தல் ஒரேகட்டமாக வரும் 19ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி, 348  வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, கடந்த 28ம் தேதி  வேட்புமனு தாக்கல் தொடங்கி, 4ம் தேதி முடிவடைந்தது. 935 பேர் களத்தில்  உள்ளனர்.

 இதனிடையே, தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கவும்,  வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் விநியோகத்தை தடுக்கும் வகையில் 24  பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.
3 ஷிப்டுகளாக தாசில்தார், சிறப்பு  எஸ்ஐ மற்றும் போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம்  நகராட்சியில் மட்டும் 3 பறக்கும் படையினர் நகரத்திற்கு வரும் வாகனங்கள்  மற்றும் புகாருக்குள்ளாகும் இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  

இதனிடையே, நேற்று கீழ்பெரும்பாக்கம் பாலம் அருகே பறக்கும்படை அலுவலர்  தாசில்தார் சங்கரலிங்கம் தலைமையில், சிறப்பு எஸ்ஐ சின்னப்பன், போலீசார்  பரமசிவம், ஷோபா ஆகியோர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்தவழியாக  நகரப்பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து சோதனையிட்டபோது,  ஏராளமான தங்க ஜிமிக்கி கம்மல், மூக்குத்தி உள்ளிட்ட நகைகள் இருந்தது  தெரியவந்தது.

இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்தவரிடம் விசாரணை நடத்தியபோது  அதேபகுதியைச் சேர்ந்த குமரன்(26) என்பதும், உரிய ஆவணங்களின்றி நகையை  எடுத்து வந்ததால் அதனை பறிமுதல் செய்து நகராட்சி அலுவலகத்திற்கு  கொண்டு சென்றனர்.

நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா முன்னிலையில் மொத்தம், பெரிய  ஜிமிக்கி கம்மல் 42, சிறிய கம்மல் 8 ஜோடி, தாலிச்சரடில் சேர்க்கப்படும்  உறுப்படி என ெமாத்தம் 598 கிராம்(75 பவுன்)  மதிப்பிலான நகையை கருவூலத்தில்  அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். இதன் மொத்த மதிப்பு ரூ.27 லட்சம் ஆகும். உரிய  ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட நகை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய  எடுத்துச் செல்லப்பட்டதா, உண்மையிலேயே ஜூவல்லரி கடைக்குதான் கொண்டு சென்றனரா?  என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Gimicky Kammal ,Shalupuram , Villupuram: Police have seized 75 pounds of gimmicks and a rope from a flying squad in Villupuram.
× RELATED தமிழகத்தில் 2 நாட்களுக்கு 5 டிகிரி...