திருமயம் வட்டாரத்தில் விதைச்சான்று இயக்குனர் ஆய்வு

திருமயம் : திருமயம் வட்டாரத்தில் விதைச்சான்று இயக்குனர் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வேளாண் வட்டாரத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை இயக்குனர் சுப்பையா, ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தை ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விதைகளின் தரம், விதை சேமிப்பு கிடங்கிள் விதைகளை பாதுகாக்கும் முறைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

மேலும் விதை முளைப்புதிறன் பரிசோதனைகள், பதிவேடுகளை ஆய்வு செய்தார். அதனை தொடந்து கண்ணணூர் கிராமத்தில் விவசாயி பாலசுப்பிரமணியன் விதை பண்ணை வயலில் அறுவடை செய்யப்பட்டிருந்த ஆடுதுறை 39 சான்று நிலை வயல்மட்ட விதைக்குவியலை ஆய்வு செய்தார்.அப்போது வேளாண்மை துணை இயக்குனர் மாநில திட்டம் மோகன்ராஜ், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் உமா, விதைச்சான்று உதவி துணை இயக்குநர் மாநில திட்டம் இயக்குநர் ஜெகதீஸ்வரி, விதை ஆய்வாளர் பாலையன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆய்விற்கான ஏற்பாடுகளை விதைச்சான்று அலுவலர்கள் மீனாள், இளஞ்செழியன், வட்டார வேளாண்மை அலுவலர் புனிதவதி, துணை வேளாண்மை அலுவலர் முருகன், உதவி விதை அலுவலர்கள் தங்கவேல்முருகன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: