×

பறக்கும்படை சோதனை 75 பவுன் ஜிமிக்கி கம்மல் தாலிச்சரடு பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம்  பெரும்பாக்கம் பாலம் அருகே உள்ளாட்சி தேர்தலர் பறக்கும்படை அலுவலர்  தலைமையில், போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்தவழியாக  நகரப்பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து சோதனையிட்டபோது,  ஏராளமான தங்க ஜிமிக்கி கம்மல், தாலிச்சரடு உள்ளிட்ட நகைகள் இருந்தது  தெரியவந்தது. இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்தவரிடம் விசாரணை நடத்தியபோது  அதேபகுதியைச் சேர்ந்த குமரன்(26) என்பதும், உரிய ஆவணங்களின்றி நகையை  எடுத்து வந்ததும் தெரிந்தது. இதனால் அவற்றை பறிமுதல் செய்து நகராட்சி அலுவலகத்திற்கு  கொண்டு சென்றனர்.

598 கிராம் (75 பவுன்)  மதிப்பிலான நகையை கருவூலத்தில்  அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.27 லட்சம். உரிய  ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட நகை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய  எடுத்துச் செல்லப்பட்டதா, ஜூவல்லரி கடைக்குதான் கொண்டு சென்றனரா?  என்பது குறித்து விசாரணை நடக்கிறது.




Tags : Kammel , Flight Test 75 lbs Gimmicky Kammel Seizure of talisman
× RELATED விழுப்புரத்தில் பறக்கும்படை சோதனை 75...