×

37வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் டில்லிபாபுவுக்கு இஸ்லாமிய அமைப்பினர் ஆதரவு

பெரம்பூர்: சென்னை மாநகராட்சி, தண்டையார் பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பூர் 37வது வார்டில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சி வேட்பாளராக வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெ.டில்லிபாபு போட்டியிடுகிறார். இவர், ஏற்கனவே இந்த பகுதியில் கொடுங்கையூர் குப்பைமேடு பிரச்னை, குடிநீரில் கழிவுநீர் கலப்பது தொடர்பான பிரச்னை, சாலை பராமரிப்பு பிரச்னை உள்ளிட்ட பொதுமக்கள் பிரச்னைகள் தொடர்பாக, கடந்த அதிமுக ஆட்சியில் பல போராட்டங்களில் ஈடுபட்டு, மக்கள் மத்தியில் செல்வாக்கு உடையவர்.

 தற்போது அதே பகுதியில், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக போட்டியிடுவதால் பொதுமக்கள் அவருக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். வேட்பாளர் ஜெ.டில்லிபாபு தினமும் வியாபாரிகள், குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள், இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த பலரையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த பெரம்பூர் பகுதி செயலாளர் கமருதீன், வட்ட செயலாளர் அமீர் பாஷா, ஷாஜகான், மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த பகுதி செயலாளர் சிராஜுதீன், வட்ட செயலாளர் ஹமீது, சையத் இப்ராஹீம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் நேற்று டெல்லிபாபுவை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும், தேர்தலில் வெற்றி பெற முழு ஒத்துழைப்பு தருவதாகவும் உறுதியளித்தனர்.
வேட்பாளர் டில்லிபாபு இன்று முதல் வீதி வீதியாக தனது பிரசாரத்தை தொடங்க உள்ளார்.




Tags : 37th ,Ward Congress ,Dillibabu , 37th Ward to Congress candidate Dillibabu Supported by Islamic organizations
× RELATED ஸ்ரீ தேவிலோகமாத்தம்மன் கோயிலில் 37ம் ஆண்டு தீ மிதி விழா