புஷ்பா பட 'ஸ்ரீவள்ளி’ பாடலை ஆங்கிலத்தில் பாடிய எம்மா ஹீஸ்டர்ஸ்: வீடியோ வைரல்

கிரவன்போல்டர்: புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஸ்ரீவள்ளி’என்ற பாடலை எம்மா ஹீஸ்டர்ஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பாடியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது.அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, சமந்தா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா படம் பெரிய வெற்றிபெற்றது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இந்திய ரசிகர்களை மட்டுமின்றி, வெளிநாட்டு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. அந்தவகையில், இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களில் ஒன்றான ‘வள்ளி’ என்ற பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, உலக அளவில் புகழ்பெற்ற டச்சு பாடகியான எம்மா ஹீஸ்டர்ஸ் பாடியுள்ளார்.

இந்தப் பாடலின் வீடியோவை, புஷ்பா படத்தின் இசை அமைப்பாளர் தேவி பிரசாத் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில், தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வௌியான சில மணி நேரத்தில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துவிட்டனர். எம்மா ஹீஸ்டர்ஸின் அழகிய குரலில்  ‘வள்ளி’ஆங்கிலப் பாடல் ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்து வருகிறது.

Related Stories: