தொடர் எதிர்ப்பு எதிரொலி தியேட்டரில் வெளியாகிறது மோகன்லால் படம்

சென்னை: தியேட்டர் அதிபர்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக, மோகன்லால் நடிக்கும் ஆராட்டு என்ற மலையாள படம் தியேட்டர்களில் வெளியாகிறது.மோகன்லால் நடித்த திரிஷ்யம் 2, சமீபத்தில் வெளியான ப்ரோ டாடி ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியானது. தொடர்ந்து பஹத் பாசில், துல்கர் சல்மான், டொவினோ தாமஸ் உள்ளிட்ட மலையாள ஹீரோக்களின் படங்களும் ஓடிடியில் வெளியானதால், தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனால் தியேட்டர் அதிபர்கள், தயாரிப்பாளர்கள் இடையே கடும் மோதல் போக்கும் ஏற்பட்டது.இந்நிலையில், இந்தப்பிரச்னையில் சுமூகமாக செல்ல நடிகர்கள் முயற்சி செய்தனர். இதையடுத்து கொரோனா பாதிப்பு இல்லாத பட்சத்தில், தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்ய முயற்சிப்பதாக தயாரிப்பாளர்கள் சேர்ந்து உறுதி அளித்தனர்.அதன்படி, இப்போது மோகன்லால் நடித்துள்ள ஆராட்டு என்ற மலையாள படம் வரும் 18ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: