×

மும்பை அணியில் ரகானே: விலகினார் ஹர்திக்

மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணியில் அனுபவ வீரர் அஜிங்க்யா ரகானே இடம் பெற்றுள்ளார்.நடப்பு சீசனுக்கான ரஞ்சி தொடர் 2 கட்டமாக நடத்தப்படும் என்று கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இத்தொடருக்கான அட்டவணை இன்னும் வெளியாகாத நிலையில், அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.மும்பை அணிக்கு பிரித்வி ஷா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்திய டெஸ்ட் தொடர்களில் ரகானே கணிசமாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறியதால் கடுமையான விமர்சனத்துக்குள்ளானார். இந்த நிலையில், மும்பை அணியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி மீண்டும் பார்முக்குத் திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மற்றொரு அனுபவ வீரரான செதேஷ்வர் புஜாரா, ரஞ்சி கோப்பையில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாட உள்ளார். தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்க்க, புஜாராவும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்து வரும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்கத் தயாராகி வருகிறார். அகமதாபாத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள அவர், நிர்ணயிக்கப்பட்ட ஓவர் போட்டிகளில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் ரஞ்சி கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். சவுராஷ்டிரா அணிக்கு ஜெய்தேவ் உனத்கட், பரோடா அணிக்கு கேதார் தேவ்தர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

* தவான், ஷ்ரேயாஸ் இருவரும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததை அடுத்து பயிற்சியை தொடங்கி உள்ளனர்.
* இலங்கை அணி ஆஸ்திரேலியாவுடன் டி20 தொடரில் மோதவுள்ள நிலையில், முன்னணி வீரர் குசால் மெண்டிசுக்கு (27 வயது) கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
* பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் களமிறங்கத் தயாராக உள்ளதாக சூரியகுமார் தெரிவித்துள்ளார்.
* ஐபிஎல் 2019 சீசனில் சிறப்பாக செயல்படத் தவறியதை அடுத்து ‘போ...உன் அப்பாவோடு சேர்ந்து ஆட்டோ ஓட்டு’ என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். தோனியின் ஆலோசனை தான் அதிலிருந்து மீள எனக்கு உதவியது என்று வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் கூறியுள்ளார்.



Tags : Raghane ,Mumbai ,Hardik , Raghane in Mumbai squad: Hardik resigns
× RELATED ஜேக் பிரேசர் 84 ரன் விளாசினார்: 10 ரன்...