எடப்பாடி பேட்டி நீட் பிரச்னையில் அரசியல் கூடாது

நீட் தேர்வு பிரச்னையில் அரசியல் இருக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி கூறினார். சட்டப்பேரவை கூட்டத்திற்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: நீட் தொடர்பாக தற்போது இரண்டாவது முறையாக கொண்டுவந்த தீர்மானத்தை அதிமுக ஆதரித்துள்ளது. இது ஒரு ஆழமான பிரச்னை. உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்புக்கு எதிராக செல்ல வேண்டும் என்றால் சட்ட வல்லுனர்களோடு கலந்து ஆலோசனை செய்து அதில் ஒரு தீர்வு கண்டு, இந்த சட்ட முன்வடிவு ஒருமனதான நிறைவேற்றப்பட்டதற்கு வலுசேர்க்கும் வகையில் அனுப்பி வைத்து நடவடிக்கை மேற்கொண்டால் அதிமுக துணை நிற்கும் என்று என்ற செய்தியை தெரிவித்துள்ளோம். . இதில் அரசியல் இருக்கக்கூடாது என்று அவர்களும் தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: