×

வைரம் சின்னத்தில் எஸ்டிபிஐ

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எஸ்டிபிஐ கட்சிக்கு வைரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்ட அறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி தனித்து களம் காண்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளர்கள் பெரும்பாலானோருக்கு (99%) வைரம் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் தண்ணீர் குழாய் சின்னமும், தீப்பெட்டி சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமரசமற்ற மக்கள் பணிகள், தன்னலமற்ற சேவைகள், மக்களுக்கான களப் போராட்டங்களால் பட்டை தீட்டப்பட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளர்களுக்கு, பட்டை தீட்டப்பட்டு மதிப்புமிக்கதாக ஜொலிக்கும் வைரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

Tags : STBI in diamond symbol
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்கள்...