தர்மபுரியில் நடந்த தில்லாலங்கடி: பாமாகவுக்கு ஆட்டம் காட்டினார்; மனுதாக்கல் செய்யாமலேயே பின்வாங்கிய பாமக வேட்பாளர்

தர்மபுரி: நகர்ப்புற உள்ளாட்சித் ேதர்தலில், தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 176 பேர் களத்தில் உள்ளனர். இதில், 25வது வார்டில் திமுக சார்பில் முன்னாள் கவுன்சிலர் முல்லைவேந்தன் மனைவி சத்யாவும், அதிமுக சார்பில் லலிதா ஆகிய 2 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். தனித்து போட்டியிடுவதாக முதலிலேயே அறிவித்த பாமக இந்த வார்டுக்கும் வேட்பாளரை அறிவித்தது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அக்கட்சியின் சமூகத்தினரை கருத்தில் கொண்டே, அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறி தனியாக போட்டியிடுகிறது.பாமக சார்பில் 25வது வார்டுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.

ஆனால் நகராட்சியின் முதல் தலைவர் வடிவேலன் மகன் முன்னாள் கவுன்சிலர் முல்லைவேந்தன், வார்டில் செல்வாக்கு பெற்றவர். தவிர முல்லைவேந்தனின் அண்ணி சாந்தலட்சுமி மற்றும் தாய் மாமன் தங்கராஜ் ஆகியோர் முன்னாள் கவுன்சிலர்கள் ஆவர். அவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்பது, எதிர்க்கட்சியினருக்கு தெரிந்ததே. ஆனால் அதிமுகவில் கவுரவ பிரச்னைக்காக வேறு வழியின்றி வேட்பாளரை நிறுத்தினர். அதேசமயம் மனுதாக்கல் கடைசி நாள் வரை காத்திருந்த பாமக வேட்பாளர், மனுதாக்கல் செய்யாமலேயே பின்வாங்கி விட்டார். இதனால் இந்த வார்டில் இருமுனை போட்டியே நிலவுகிறது.

Related Stories: