×

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உட்பட 5 மாநிலங்களில் யார் முதல்வராக வேண்டும்? கடைசி நேர கருத்துக் கணிப்பில் புது தகவல்

புதுடெல்லி: உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உட்பட 5 மாநிலங்களில் யார் முதல்வராக வேண்டும்? என்ற கடைசி நேர கருத்துக் கணிப்பில் மக்கள் தங்களது விருப்பங்களை தெரிவித்துள்ளனர்.  உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் வரும் 10ம் தேதி முதல் 7 கட்டங்களாக பேரவை தேர்தல் நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் முதற்கட்டமாக நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்நிலையில் சி-வோட்டர், ஏபிபி செய்தி நிறுவனங்கள் சார்பில் எடுக்கப்பட்ட கடைசி நேர கருத்துக் கணிப்பில், 5 மாநிலங்களில் யாரை முதல்வராக வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்பதை தெரிவித்துள்ளது.

அதன்படி உத்தரபிரதேசத்தில் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்ய நாத்தை 43.6% பேர், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷை 33.7% பேர், பகுஜன்சமாஜ்வாதி தலைவர் மாயாவதியை 15.6% பேர், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை 4.4% பேர் அடுத்த முதல்வராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். பஞ்சாப்பில் ஆம்ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மானுக்கு 35.7%, தற்போதைய காங்கிரஸ் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிக்கு 25.9%, அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதலுக்கு 18.7% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். உத்தரகாண்டில் காங்கிரஸ் தலைவர் ஹரிஷ் ராவத்துக்கு 39.4% பேர், தற்போதைய பாஜக முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு 35.5% பேர், ஆம்ஆத்மி முதல்வர் வேட்பாளர் அஜய் கோத்யாலுக்கு 115 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கோவாவில் தற்போதைய பாஜக முதல்வர் பிரமோத் சாவந்துக்கு 30.4% பேர், அதே பாஜகவை சேர்ந்த விஸ்வராவ் ரானேவுக்கு 14.5% பேர், ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் அமித் பலேகருக்கு 19.5 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மணிப்பூரில் ஆளும் பாஜக முதல்வர் பைரன் சிங்குக்கு 39.7% பேர், என்பிபி கட்சியின் ஒக்ராம் சிங்கு 25.9% சதவீதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர். மேற்கண்ட கருத்துக் கணிப்பின்படி பார்த்தால் உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூரில் மீண்டும் பாஜகவும், பஞ்சாப்பில் ஆம்ஆத்மியும், உத்தரகாண்டில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது.

Tags : Utar Pradesh ,Utarakhand ,Punjab , Who is the Chief Minister of 5 states including Uttar Pradesh, Uttarakhand and Punjab? New information in the last poll
× RELATED 5 விக்கெட் வித்தியாசத்தில் ராயல்சை வீழ்த்தியது பஞ்சாப்