சென்னை மாநகராட்சி தேர்தல் களத்தில் 2,670 வேட்பாளர்கள்; 633 பேர் வேட்பு மனுக்கள் வாபஸ்

சென்னை: சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் 3,303 பேர் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் நேற்று 633 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து மொத்தம் 2,670 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதாக மாவட்ட தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை  மாநகராட்சியில்  உள்ள 200  வார்டுகளுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்,  அதிமுக, பாஜக மற்றும்  சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல்  செய்தனர். அதன்படி ஆண்கள்  1,696, பெண்கள் 1,847,  திருநங்கை 3 பேர் என  மொத்தம் 3,546 பேர் வேட்புமனுக்கள் தாக்கல்  செய்துள்ளனர்.

இதையடுத்து  அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கையில் முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் 243 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 3,303 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.  இதையடுத்து வேட்புமனு  தாக்கல் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் நேற்று மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ்  பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னையில் உள்ள 200 வார்டுகளில் ஏற்றுக்ெகாள்ளப்பட்ட 3,303 வேட்புமனுக்களில் 633 வேட்பாளர்கள் தேர்தல் போட்டியிடவில்லை எனக்கூறி தாக்கல் ெசய்த வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து வரும் 19ம் தேதி நடைபெறும் தேர்தலில் 2,670 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து இவர்களுக்கு இன்று முதல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டு பெயர் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியிடப்படும்.

Related Stories: