அகிலேஷ்க்கு ஆதரவாக உத்தரப்பிரதேச பிரச்சார களத்தில் களமிறங்கிய மம்தா பானர்ஜி; தீதியின் உதவி சமாஜ்வாடி பலனளிக்குமா? : பாஜக விமர்சனம்

உத்தரப்பிரதேசம்: அகிலேஷ்க்கு ஆதரவாக உத்தரப்பிரதேச பிரச்சார களத்தில் களமிறங்கி உள்ள மம்தா பானர்ஜி தீதியின் உதவி அகிலேஷுக்கு பலனளிக்குமா? என பாஜக விமர்சித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை தோற்கடிக்கும் வாய்ப்புள்ள ஒரே கட்சியாக சமாஜ்வாடி கருதப்படுகிறது. சமாஜ்வாடியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளதை உணர்ந்த பாஜக நிர்வாகிகள் சமாஜ்வாடியில் இணைவதாக கூறப்படுகிறது. முலாயம்சிங் யாதவ் முழு நேர அரசியலில் இல்லாத நிலையில், அகிலேஷ் யாதவ் தனித்து பாஜகவை எதிர்க்கும் நிலையில் உள்ளார். இதனால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் படி கூறியிருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று மம்தா விரைவில் உத்தரப்பிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா போராடிய விதம் முன் எப்போதும் விட உக்கிரமாக இருந்ததாக சமாஜ்வாடி பாராட்டியிருந்தது. மம்தா போராட்டத்தை தேசமே பாராட்டி இருந்ததாகவும் அகிலேஷ் குறிப்பிட்டுருந்தார். தற்போது பாஜக-விற்கு எதிரான யுக்திகளை, கருத்தரவை மம்தா உத்தரப்பிரதேசம் வந்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. ஆயினும் உத்தரப்பிரதேசத்தில் செல்வாக்கு இல்லாத மம்தாவின் பிரச்சாரம் எந்த விதத்திலும் சமாஜ்வாடிக்கு உதவப் போவது இல்லை என பாஜக விமர்சித்துள்ளது. தீதியின் யுக்தி அகிலேஷுக்கு பலனளிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என விமர்சனம் செய்துள்ளது.                         

Related Stories: