×

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ்; சோங்காவை வீழ்த்தினார் ஹர்காஸ்

ரோட்டர்டாம்: ரோட்டர்டாம் டென்னிஸ் ஓபன் போட்டியில் நேர் செட்களில் பிரான்ஸ் வீரர் சோங்காவை, போலந்து வீரர் ஹியூபர்ட் ஹர்காஸ் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.  இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த இப்போட்டியில் ஏடிபி தரவரிசையில் 11ம் இடத்தில் உள்ள இளம் வீரர் ஹியூபர்ட் ஹர்காசும், பிரான்சின் மூத்த வீரர்  சோங்காவும் மோதினர். இதில் முதல் செட்டை 6-4 என எளிதாக ஹர்காஸ் கைப்பற்றினார். 2வது செட்டில் சோங்கா, கடுமையாக போராடினார். தனது கேம்களை தக்க வைத்துக் கொண்டார்.

இதனால் அந்த செட் டை பிரேக்கர் வரை நீடித்தது. டை பிரேக்கரில் தனது அதிரடியான சர்வீஸ்களின் மூலம் ஹர்காஸ், 7-6 என 2ம் செட்டை கைப்பற்றினார். இதன் மூலம் இப்போட்டியில் 6.4, 7-6 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஹர்காஸ் முன்னேறியுள்ளார். மற்றொரு போட்டியில் ஏடிபி தரவரிசையில் 13ம் இடத்தில் உள்ள இங்கிலாந்தின் இளம் டென்னிஸ் நட்சத்திரம் கேமரூன் நாரி, தரவரிசையில் 31ம் இடத்தில் உள்ள பிரான்ஸ் வீரர் உகோ ஹம்பர்ட்டை 6-2, 6-4 என நேர் செட்டிகளில் எளிதாக வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் கேமரூன் நாரியும், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Tags : Rotterdam Open Tennis ,Tsonga , Rotterdam Open Tennis; Hargas defeated Tsonga
× RELATED ராட்டர்டாம் ஓபன் டென்னிஸ்; பைனலில் சிட்சிபாஸ்-ஆகர் அலியாசைம் மோதல்