×

தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் மற்றும் விதிகள் திருத்தங்கள்: உயர்நிலைக்குழு ஆலோசனை

சென்னை: தமிழ்நாடு பொது நூலகச்சட்டம் 948 மற்றும் தமிழ்நாடு பொது நூலக விதிகள் ஆகியவற்றில் தேவைப்படும் தக்க திருத்தங்கள் மேற்கொள்ள, அமைக்கப்பட்ட உயர் நிலைக் குழுவின் முதல் கூட்டம் 07 02 2022 (திங்கள் கிழமை) அன்று காலை 11.00 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் உயர் நிலைக் குழுத் தலைவர் முனைவர் ம.இராசேந்திரன் அவர்கள் தலைமையிலும் உறுப்பினர் செயலர் பொது நூலக இயக்குநர் க இளம்பசுவத் இஆப ய, அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 6 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் உயர்நிலைக்குழு உறுப்பினர் - செயலாளர். அவர்கள் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

* பொது நூலகச் சட்டம் மற்றும் விதிகள் திருத்தம்

. பொது மக்கள் மற்றும் சிறுவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தினை மேம்படுத்துதல்

* நிதி சார்ந்த இடர்ப்பாடுகளைக் களைதல் .

* உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக மேம்பாடு

* நவீனத் தொழில் நுட்பம் பயன்பாட்டைமேம்படுத்துதல்

* நுலகப் பணியாளர்கள் மற்றும் இயக்குநர் பணியிட விதிகள்

* நூலக வரி

* மாநில நூலகக்குழு ஏற்படுத்துதல்

* மின்னுருவாக்கம் மற்றும் மின் நூலகம் தொடர்பாக இதுவரையிலும் தமிழ் நாட்டிலும் இந்திய அளவிலும் அளவிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளைக் கண்டறிந்து பின்பற்றல் ஆகியவை குறித்து விரிவாகக்
கலந்துரையாடல் நடைபெற்றது. அரசாணைப்படி ஆறு மாத காலத்திற்குள் அறிக்கை அளிக்கப் பணி அட்டவணை தயாரிக்கவும் பணிப்பகிர்வு மேற்கொள்ளவும் நவீனத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திச் சிறப்பாகச் செயற்படும் நூலகங்களை நேரில் பார்வையிடவும் இனி வரும் காலங்களில் சிறப்பு அழைப்பாளர்களும் கலந்துகொள்ளும் வகையில் குழுக் கூட்டங்களை இணையவழி நடத்தவும் குழுக் தீர்மானிக்கப்பட்டது.

Tags : Tamil Nadu Public Library , Tamil Nadu Public Library Law and Rules Amendments: High Level Committee Consultation
× RELATED தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் மற்றும்...