×

பாரிமுனை பகுதியில் கோயில் சிலாப் இடிந்து ஒருவர் பலி: அமைச்சர், எம்பி நேரில் ஆய்வு

சென்னை: மண்ணடி தம்புசெட்டி தெருவில் பழைமை வாய்ந்த பிள்ளையார் கோயில் உள்ளது. ஊரடங்கு காலம் என்பதால் தற்போது கோயில் பூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை 8:30 மணியளவில் திவாகர்(54) என்பவர் கோயிலுக்கு வெளியே இருந்து கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, வெளிப்புறத்தில் இருந்து 20 அடி நீளமுள்ள சிலாப் திடீரென அவர் தலை மீது இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே திவாகர் பரிதாபமாக ரத்த வௌ்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்த எஸ்பிளனேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்து இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இச்சம்பவம் மண்ணடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post பாரிமுனை பகுதியில் கோயில் சிலாப் இடிந்து ஒருவர் பலி: அமைச்சர், எம்பி நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Parimuna ,Chennai ,Mannadi Thambuchetty Street ,Dinakaran ,
× RELATED கைதான அர்ச்சகரின் தாய் மாமன் மீது பெண் புகார்