×

நுங்கம்பாக்கம் டி.ஜி.பி. வளாகத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் விடிய விடிய காத்திருப்பு போராட்டம்: ஊதிய உயர்வு உள்பட 3 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தல்

சென்னை: சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி வரும் கவுரவ விரிவுரையாளர்களின் காத்திருப்பு போராட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் விடிய விடிய நீடித்து வருகிறது. தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரிகளில் 4,084 கவுரவ விரிவுரையாளர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். ரூ.20 மாத ஊதியம் பெற்றுவரும் தங்களுக்கு பிற மாநில அரசுகளை போல ஊதியத்தை உயர்த்தி வழங்கவேண்டும் என கூறும் அவர்கள், பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரிக்கல்வி இயக்குநர் வளாகத்தில் நேற்று காலை முதல் கவுரவ விரிவுரையாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து செய்தியாளரிடம் பேசிய கவுரவ விரிவுரையாளர் ஒருவர், தங்களுக்கு குறைவான ஊதியம் வழங்குவதால் தங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என வேதனை தெரிவித்தார். மேலும், தங்களுடன் பணிபுரியும் சக மகளிர் குழுவிற்கும் மகப்பேறுமனை இல்லை என்றும்; தங்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்த அவர், இந்த 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியே போராட்டம் நடத்திக்கொண்டு உள்ளோம் என தெரிவித்தார். இந்த புதிய ஆட்சி அமைத்திருக்கும் விடியல் அரசு நல்லதொரு நம்பிக்கையை அளித்து வருகிறது, அதே நம்பிக்கையில் தாங்களும் இந்த நம்பிக்கையை முன் வைத்துள்ளோம் என கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த அரசு தங்களின் வாழ்வாதாரத்தினை பாழ்படுத்தியது; எவ்வித அடிப்படை உரிமையும் பெற இயலவில்லை, தொடர்ந்து 10 வருடமாக கோரிக்கைகளை முன்வைத்து எந்த பயனும் இல்லை என கூறிய அவர், இந்த புதிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அந்தந்த கல்லூரிகளில் இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார். மாணவர்களின் நலன் கருதி அனைத்து கவுரவ விரிவுரையாளர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை என கூறிய அவர் விரைவில் தங்களுக்கு தீர்வு கிடைக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.                


Tags : Nungambakkam ,DGP ,Vidya Vidya , Nungambakkam, DGP, Honorary Lecturer, Waiting Struggle, Wage Increase, 3 Feature, Request
× RELATED நடிகர் மன்சூர் அலிகான் கட்சி...