×

நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு

சென்னை: நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியதை தொடர்ந்து, மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் அதே தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கும் வகையில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது நீட் தேர்வு விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். இந்நிலையில் நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு பாஜக உறுப்பினர்கள் செய்தனர்.

அப்போது நீட் விலக்கு மசோதா மீதான விவாதத்தில் பேசிய பாஜகவின் நயினார் நாகேந்திரன்; ஏ.கே.ராஜனின் குழு அறிக்கையை அவமானப்படுத்தும் வகையில் ஆளுநர் கருத்து கூறவில்லை என தெரிவித்தார். வெளியே போறதுக்கு இவ்வளவு பில்டப் செய்ய வேண்டாம்.. போறதுனா போங்க குறுக்கிட்டு பேச முயன்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனுக்கு சபாநாயகர் எதிர்ப்பு தெரிவித்தார். நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதாவின் மீது பேச வாய்ப்பளிக்க வில்லை எனக் கூறி பாஜக வெளிநடப்பு செய்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக உறுப்பினர்கள்; சமூக நீதியை காத்திருக்கிறது நீட்.

அனைத்து மாணவர்களும் சமூகநீதியுடன் பயில நீட் தேவை என்பதே ஒன்றிய அரசின் நிலைப்பாடு. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக பொருளாளர் துரைமுருகன்; பாஜக வெளிநடப்பு செய்ததால் கடந்த முறை மசோதா ஒருமனதாக நிறைவேறியது; இந்த முறையும் வெளிநடப்பு செய்தால் மசோதா ஒருமனதாக நிறைவேறும் என கூறினார்.


Tags : Bajaba , BJP members walk out of Assembly in protest of NEET exemption bill
× RELATED நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக,...