மனாஜரி : மடகாஸ்கரை தாக்கிய பத்சிராய் சூறாவளி வீடுகள், கட்டிடங்களை சின்னாபின்னாமாக்கி இருக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான விளை நிலங்களை முற்றிலும் அழித்து இருக்கிறது. மடகாஸ்கர் நாட்டில் கிழக்கு கடற்கரை நகரங்களை பத்சிராய் சூறாவளி தாக்கியது. மரங்கள், மின்கம்பங்கள், செல்போன் கோபுரங்களை பிடுங்கி எரிந்த இந்த சூறாவளி 3000த்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிவிட்டது. பத்சிராய் சூறாவளிக்கு இதுவரை 20 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் 1 ;லட்சம் வீடுகள், உடைமைகளை இழந்து இருப்பதாகவும் மடகாஸ்கர் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
நூற்றுக்கணக்கான கிராமங்கள் தனித் தீவுகள் ஆகிவிட்டதால் அத்தியாவசிய பொருட்கள் ஹெலிகாப்டர் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட மடகாஸ்கர் அதிபர் Andry Rajoelina மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அறுவடைக்கு தயாராகி இருந்த அரிசி, கோதுமை மற்றும் பல பயிர்களை சூறாவளி அழித்துவிட்டதால் அடுத்த 6 மாதங்களுக்கு மனாஜரி உள்ளிட்ட கிழக்கு பகுதிகள் உணவு தட்டுப்பாட்டினை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக மடகாஸ்கர் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.