×

சமூகநீதி கூட்டமைப்பில் இணைய கோரிய மு.க.ஸ்டாலின் கடிதம்: சோனியாவிடம் ஒப்படைப்பு: காங்., பிரதிநிதியாக வீரப்ப மொய்லி நியமனம்

ெசன்னை: மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து, அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணைய அழைப்பு விடுத்து, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ஒப்படைத்தார்.
உடனடியாக, சோனியா காந்தி, அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக வீரப்ப மொய்லியை நியமித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இச்சந்திப்பின்போது, ராகுல் காந்தி உடனிருந்தார்.

அதோடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்க தானும், தான் சார்ந்த இயக்கமும் ஜனநாயக-மதச்சார்பற்ற முற்போக்குச் சக்திகளுடன் இணைவதாகவும், இதுகுறித்து. நேரில் கலந்தாலோசிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமூகநீதிக் கருத்தியலை தேசிய அளவில் முன்னெடுப்பதற்காக வாழ்த்து தெரிவித்து, இந்த அமைப்பினை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து நாம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி, மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த முன்னெடுப்பினைப் பாராட்டி, இதற்கு மக்கள் ஜனநாயகக் கட்சி முழு ஒத்துழைப்பினை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : Social Justice Federation ,KKA Stalin ,Sony ,Kang ,Moily , MK Stalin's letter requesting internet in Social Justice Alliance: Handing over to Sonia: Cong., Veerappa Moily appointed as representative
× RELATED கருப்பு சருமத்துக்கு மாறிய இலியானா: நெட்டிசன்கள் தாக்கு