×

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 59 பேர் போட்டி

ஊத்துக்கோட்டை:  ஊத்துக்கோட்டை பேரூராட்சி தேர்தலில் 11 பேர் வாபஸ் பெற்றதால் பேரூராட்சியில் திமுக , அதிமுக உள்ளிட்ட 59 பேர் போட்டியிடுகின்றனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் நகர் புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிமுக , பாஜக என 70 பேர் வேட்பு மனுக்கள்  தாக்கல் செய்தனர். இதில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தற்போது திமுக 14,  அதிமுக 14,  பாஜக 9 , நாம் தமிழர் 5 , பாமக 3 , சிபிஐஎம்எல் 2 , காங்கிரஸ் 1 , பகுஜன் சாமாஜ் 1 எனவும்,  சுயேச்சை 10 இடங்களில் என 59 பேர் களத்தில் உள்ளனர். ஆரணி பேரூராட்சியில் 64 பேர் வேட்பு மனு தாக்கல் செய்ததில் 3 சுயேச்சை வாபஸ் பெற்றதால் திமுக அதிமுக உள்ளிட்ட 61 பேர் களத்தில் உள்ளனர்.

Tags : Uthukottai , 59 contestants in Uthukottai municipality
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரசு...