×

பெரம்பலூர் அருகே ஜல்லிக்கட்டு; காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே சில்லக்குடியில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 350 காளைகள் ஆவேசமாக சீறிப்பாய்ந்தன. காளைகளை போட்டி போட்டு காளையர்கள் அடக்கி பரிசுகளை அள்ளி சென்றனர். பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதில் திருச்சி, தஞ்சை, மதுரை, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து காளைகள், வீரர்கள் வந்தனர். முன்னதாக மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர் தலைமையிலான மருத்துவ குழுவினர், காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இறுதியாக ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 350 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல் மருத்துவ பரிசோதனை செய்து 300 மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.

தலா 75 மாடுபிடி வீரர்கள் வீதம் காளைகளை அடக்க களம் இறக்கப்பட்டனர். 9 மணிக்கு துவங்கிய ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசல் வழியே ஆவேசமாக சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு வீரர்கள் அடக்கினர். சில காளைகளுடன் வீரர்கள் மல்லுகட்டினர். வீரர்களிடம் பிடிபடாமல் களத்தில் நின்று பல காளைகள் விளையாடின. இதில் காளைகள் முட்டி காயமடைந்த வீரர்களுக்கு அங்கேயே மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கக்காசு, சில்வர் அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.


Tags : Jallikkatu ,Perambulur , Jallikattu near Perambalur; Bulls wrestling with bulls
× RELATED பொங்கல் பண்டிகைக்காக பெரம்பலூரில் வெல்லம் தயாரிப்பு பணிகள் தீவிரம்