×

புரோ கபடி லீக்கில் இன்று குஜராத் ஜெயன்ட்ஸ்-ஜெய்ப்பூர் தெலுங்கு-பெங்கால் மோதல்

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 98வது லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் 38-29 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. 16வது போட்டியில் 11வது வெற்றியை பெற்ற பாட்னா பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.

தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் 40-36 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தி 6வது வெற்றியை பதிவு செய்தது. இன்று இரவு 7.30 மணிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், இரவு 8.30மணிக்கு பெங்கால் வாரியர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

Tags : Gujarat Giants ,Jaipur ,Telugu ,Bengal ,Pro Kabaddi League , Gujarat Giants-Jaipur Telugu-Bengal clash today in Pro Kabaddi League
× RELATED முந்தைய முறையை விட தேர்தல் பத்திர...