×

ஆழித்தேரோட்ட விழாவையொட்டி திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் பந்தல் அமைக்கும் பணி மும்முரம்

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்ட விழாவினையொட்டி பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும் , சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி என நிலப்பரப்பினை கொண்ட இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும்,உற்ச்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைப்பெறுவது வழக்கம். இந்நிலையில் நடப்பாண்டில் இந்த ஆழித்தேரோட்டமானது அடுத்த மாதம் 15ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆழித்தேரோட்டத்தையொட்டி தேர் கட்டுமான பணிக்கு குறைந்தபட்சம் 45 நாட்கள் தேவை என்ற நிலையில் இதற்காக அதன் கண்ணாடி கூண்டுகள் பிரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஏற்கனவே ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தேரோட்ட விழாவினையொட்டி தியாகராஜர் ஆழித்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும் போது கோயிலின் விட்டவாசல் மற்றும் நடவாகன தெரு, சன்னதி தெரு வழியாக சென்று ஆழித்தேரில் எழுந்தருளுவது வழக்கம் என்பதால் இந்த இடங்களில் பந்தல் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.



Tags : Thiruvarur Thiyagarajaswamy Temple ,Extinction Festival , Thiruvarur Thiyagarajaswamy Temple
× RELATED திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில்...