×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ளாட்சி தேர்தலையொட்டி போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான வாக்கு சேகரிப்பு பணியில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழநியில், பழநி நகராட்சி, ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம், கீரனுார் பேரூராட்சிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி தங்களது வாக்குகளை செலுத்தலாம் என்பதை உணர்த்தும் விதமாக பழநி நகர மற்றும் பேரூராட்சி பகுதிகளில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

பழநி காவல்துறை கண்காணிப்பாளர் சத்தியராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான போலீசார், ஊர்க்காவல் படையினர் பங்கேற்றனர். பழநி பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி காந்தி ரோடு, பெரிய கடை வீதி, தேரடி, பழைய தாராபுரம் ரோடு, சுப்பிரமணியபுரம் ரோடு, நால் ரோடு வழியாக பெரியார் சிலை பகுதியில் நிறைவுகொடி அணிவகுப்பு நிறைவுபெற்றது. இதேபோல் பாலசமுத்திரத்திலும் கொடி அணி வகுப்பு நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், மகேந்திரன், போலீசார், ஊர்க்காவல் படையினர் பலர் பங்கேற்றனர்.


Tags : Urban Local Elections ,Dinduckal ,District ,Police Flag march ,Palani , Local elections, Palani, police, flag parade
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...