×

ஆதம்பாக்கம் வாணும்பேட்டை பகுதியில் 165வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் நாஞ்சில் ஈஸ்வரபிரசாத் வாக்குசேகரிப்பு

ஆலந்தூர்: தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் வி.ஈஸ்வரபிரசாத் சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலம், 165வது வார்டு திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக கை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர், ஆதம்பாக்கம் பகுதியில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது, ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளர் என்.சந்திரன் உடன் சென்றார்.

நாஞ்சில் வி.ஈஸ்வர பிரசாத் பொதுமக்களிடம் கூறும்போது, காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் என்னை வெற்றி பெறச் செய்தால் ஆலந்தூர் மண்டலம், 165வது வார்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வேன். பொதுமக்கள் குறைகளை அவ்வப்போது கேட்டறிந்து நிவர்த்தி செய்வேன். தினந்தோறும் குப்பை அகற்றும் பணி, கால்வாய் தூர்வாரும் பணி போன்றவற்றை நேரில் சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

அப்போது திமுக முன்னாள் கவுன்சிலர் ஆர்.பாபு, நாகராஜசோழன், சேது செந்தில், மாவட்ட பிரதிநிதி லியோ பிரபாகரன், ஜி.ரமேஷ், கிறிஸ்டோபர், டி.ராஜேஷ், பெருமாள், பாபா செந்தில், ஆலந்தூர் தெற்கு பகுதி செயலாளர் ஆதம் ரமேஷ், லயன் காமராஜ், பி.எஸ்.ராஜ், ஏழுமலை, எஸ்.ரமேஷ், மதிமுக சார்பாக கராத்தேபாபு, ஜி.திருநா உட்பட பலர் சென்றனர்.

Tags : Nanjil Iswaraprasad ,165th ,Ward Congress ,Adambakam Wanumpeta , 165th Ward Congress Candidate Nanjil Eeswaraprasad Polling in Adambakkam Vanumpettai Area
× RELATED சிங்காரவேலர் 165வது பிறந்தநாள் முதல்வர் வாழ்த்து