×

நந்திவரம்-கூடுவாஞ்சேரி, திருக்கழுக்குன்றத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்: அமைச்சர், எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

கூடுவாஞ்சேரி: நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி தேர்தலை யொட்டி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் கூடுவாஞ்சேரியில் நேற்று நடைபெற்றது. நகர கழக பொறுப்பாளர் வக்கீல் ஜி.கே.லோகநாதன் தலைமை வகித்தார். கூட்டணி கட்சிகளின் நகர செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக் வரவேற்றார்.

காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும், ஊரக தொழில் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் போட்டியிடும் 30 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். முடிவில் நகர இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

 திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில்  மொத்தம் உள்ள  18 வார்டுகளில், திமுக 16 வார்டுகளிலும், காங்கிரஸ் 1 மற்றும் விசிக 1 என வார்டுகளிலும் போட்டியிடுகின்றன.  இந்நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டம் திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்றது. வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ.தமிழ்மணி தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் ஜி.டி.யுவராஜ் முன்னிலை  வகித்தார்.

ஊரக தொழில் துறை அமைச்சர்  தா.மோ.அன்பரசன் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், ‘திமுக  மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றியடைய வைக்க கட்சியினர் ஒருமித்த கருத்தோடு தேர்தல் களப்பணியாற்ற  வேண்டும், என்றார்.

இதில்  காஞ்சிபுரம் எம்.பி.  செல்வம், திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.டி.அரசு, துணை தலைவர்  எஸ்.ஏ.பச்சையப்பன், மாவட்ட கவுன்சிலர் ஆர்.கே.ரமேஷ்  காங்கிரஸ் மாவட்ட தலைவர் செந்தில்குமார், விசிக தொகுதி செயலாளர்  அ.ந.பெருமாள், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம்  பாஷா, திமுக நிர்வாகிகள் செல்வகுமார், கோபால், சுகுமாரன்,  எம்.கே.தினேஷ்,  செங்குட்டுவன், சரவணன், அழகிரி உட்பட பலர் பங்கேற்றனர் முடிவில்  பேரூர் இளைஞரணி செயலாளர் இளங்கோ நன்றி கூறினார்.

Tags : DMK ,Nandivaram-Guduvancheri ,Thirukkalukkunram , DMK and Coalition Party Candidates Introductory Meeting at Nandivaram-Guduvancheri, Thirukkalukkunram: Participation of Ministers, MPs, MLAs
× RELATED திருக்கழுக்குன்றத்தில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு