×

சார்லஸ் மனைவி கமீலாவுக்கு இங்கிலாந்து ராணி அந்தஸ்து: 2ம் எலிசபெத் விருப்பம்

லண்டன்:  இங்கிலாந்து ராணி 2வது எலிசபெத் (95). அவர் அரியணை ஏற்று 70 ஆண்டுகள் ஆகின்றன. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதில், ‘எனக்கு நீங்கள் அனைவரும் வழங்கிய ஆதரவுக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் விசுவாசம், பாசத்திற்கு நான் எப்போதும் நன்றி உள்ளவராகவும், தாழ்மையுடனும் இருக்கிறேன். எனது காலம் முழுமை அடையும்போது எனது மகன் சார்லஸ் அரசராவார்.

அப்போது, எனக்கு கொடுத்த அதே ஆதரவை அவருக்கும், அவருடைய மனைவி கமீலாவுக்கும் நீங்கள் வழங்குவீர்கள் என்று எனக்கு தெரியும். அந்த நேரம் வரும்போது, தனது நேர்மையான சேவையின் காரணமாக இங்கிலாந்தின் ராணியாக கமீலா ஆக வேண்டும் என்பதே எனது உண்மையான விருப்பமாகும்,’ என்று கூறியுள்ளார்.

Tags : England ,Charles' ,Camila ,Elizabeth II , Queen of England status for Charles' wife Camila: Elizabeth II's choice
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை