×

விளாப்பாக்கம் பேரூராட்சி 13வது வார்டில்: திமுக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் 13வது வார்டில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிறார். ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளுக்கு 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் விளாப்பாக்கம் பேரூராட்சியில் 13வது வார்டில் திமுக சார்பில் விளாப்பாக்கம் புதிய பகுதியைச் சேர்ந்த விஜயா பழனி(34) என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே திமுக சார்பில் மனு தாக்கல் செய்த விஜயா பழனி 13வது வார்டு கவுன்சிலராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதி ஆகிவிட்டது. எனினும் இதற்கான அறிவிப்பு இன்று வேட்புமனு வாபஸ் பெறுதலை தொடர்ந்து மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு பிறகு தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Vilapakkam Municipality 13th Ward ,DMK , Vilapakkam Municipality 13th Ward: DMK candidate wins without contest
× RELATED தேர்தல் வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்