மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 48.50 லட்சம் பேர் பயன்: மருத்துவத்துறை அறிவிப்பு

சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் நேற்று முன்தினம் வரை 48 லட்சத்து 50 ஆயிரத்து 213 பேர் பயனடைந்துள்ளனர் என்று தமிழக  மருத்துத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். தமிழக சுகாதாரத்துறையின் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி கடந்த 7 மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில், உயர் ரத்த அழுத்த நோய் சிகிச்சைக்காக முதன் முறையாக 19,76,534 பேரும், தொடர்சேவைகள் 17,08,701 பேர், நீரிழிவு நோய் சிகிச்சை முதன்முறையாக 13,51,850 பேர், தொடர் சேவையாக 12,12,149 பேர், உயர் ரத்த அழுத்த மற்றும் நீரிழிவு நோய் சிகிச்சை முதன்முறையாக 9,99,028 பேர், தொடர் சிகிச்சை 9,43,547 பேர், நோய் ஆதரவு சிகிச்சை முதன்முறையாக 1,78,005 பேர், தொடர் சிகிச்சை 1,38,269 பேர், இயன்முறை சிகிச்சை முதன் முறையாக 3,43,575 பேர், தொாடர் சேவையாக 2,73,906 பேர், சிறு நீரக நோய்க்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்வதற்கு தேவையான பைகள் பெற்றவர்கள் முதன்முறையாக 1,221 பேர், தொடர் சேவையாக 1,131 பேர் என முதன்முறையாக 48 லட்சத்து 50 ஆயிரத்து 213 பேரும், தொடர் சேவையாக 42 லட்சத்து 77 ஆயிரத்து 703 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இவ்வாறு மருத்துவ அதிகாரிகள் கூறினர்.

Related Stories: