×

செந்துறை அருகே சின்னாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 10 மாட்டுவண்டிகள் பறிமுதல் : விடுவிக்ககோரி டிஎஸ்பி காலில் விழுந்த பெண்

செந்துறை : அரியலூர் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள சிவராமபுரம் கிராமத்தில் உள்ள சின்னாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிவந்த பத்து மாட்டுவண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.கோவில் வேலை செய்ய மணல் அள்ளியதாகவும், விற்பனை செய்ய இல்லை எனக்கூறி வண்டிகளை விடுவிக்குமாறு டிஎஸ்பி காலில் விழுந்து பெண் கதறி அழுதார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்திற்கு உட்பட்ட சிவராமபுரம், அங்கனூர், தளவாய் பகுதியில் செல்லும் சின்னாறுஓடையில் அங்கனூர், சிவராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கோயில்வேலை, சிறு பாலங்கள் போன்ற பொது காரியத்திற்காக மாட்டு வண்டி மூலம் மணல் ஏற்றி சென்றனர். அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தளவாய் போலீசார் மாட்டுவண்டிகளில் மணல் ஏற்றிச் செல்லப்படுவதை அறிந்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்ய முயற்சித்தனர்.

இதனால் போலீசாருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் டிஎஸ்பி மதன் மணல் மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். அப்போது மாட்டுவண்டி தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் போலீசாரின் காலில் விழுந்து தங்கள் வாழ்வாதாரமான மாட்டு வண்டிகளை விடுவிக்க வேண்டும் கதறி அழுதனர்.

மேலும் அப்பகுதியை சேர்ந்த பல்வேறு கட்சி பிரமுகர்கள் போலீசாரிடம் பேசினர். எனினும் போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்வதாகவும், காவல்நிலையத்திற்கு வந்து மாட்டு வண்டிகளை எடுத்துச் செல்லுங்கள் என தொழிலாளர்களிடம் கூறிவிட்டு மணலுடன் மாட்டு வண்டிகளை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

Tags : Sand ,Sinnat ,Sendura , Senthurai, Ariyalur,Sand Robbery,DSP
× RELATED மத்தியப் பிரதேசத்தில் உதவி சார்பு...