கோடமூலா, அள்ளூர்வயல் ஆதிவாசி காலனியில் குடியிருப்பு பகுதிகளை ஒட்டியுள்ள மூங்கில்களை வெட்டி அகற்ற கோரிக்கை

கூடலூர் : கூடலூரை அடுத்துள்ள கோமூடலா, அள்ளூர்வயல் ஆதிவாசி குடியிருப்புகளையொட்டி வளர்ந்துள்ள மூங்கில்களை வெட்டி அகற்ற வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடலூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட கூடலூர், ஸ்ரீமதுரை, பாடந்துரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வளர்ந்துள்ள ஏராளமான மூங்கில்  தற்போது காய்ந்து போய் உலர்ந்து வருகின்றன. இந்த மூங்கில்கள் குறித்து தற்போது வனத்துறையினரும் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

 குடியிருப்புகளை ஒட்டி காய்ந்த நிலையில் உள்ள மூங்கில்கள் கோடை காலத்தில் எளிதில் தீப்பிடிக்கும் நிலையில் உள்ளன. அவ்வாறு மூங்கில் காடுகளில் தீ ஏற்பட்டால் அவை குடியிருப்புகளை பாதிக்கும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கோடமூலா பகுதியில் உள்ள பெரும்பாலான ஆதிவாசி குடியிருப்புகள் அரசின் புதிய தொகுப்பு வீடுகள் கட்டுவதற்காக இடிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தற்போது மூங்கில்கள் மற்றும் பிளாஸ்டிக்கினால் ஆன வீடுகளில் வசித்து வருகின்றனர்.

மேலும் அருகிலேயே ஊராட்சி துவக்கப்பள்ளியும் உள்ளது. எனவே இங்குள்ள காடுகளில் உள்ள உலர்ந்த மூங்கில்களை விரைவாக வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோடமூலா மற்றும் அள்ளூர்வயல்  பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: