×

விவசாயிகள் அதிர்ச்சி திருச்சுழியில் மர்மநோய் தாக்கி ஆடுகள் சாவு

திருச்சுழி : திருச்சுழி பகுதியில் மர்மநோய் தாக்கி ஆடுகள் உயிரிழந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.திருச்சுழி பகுதியில் உள்ள ஆலடிபட்டி, தம்மநாயக்கன்பட்டி, இராமசாமிபட்டி கிராமங்களில் உள்ள விவசாயிகள் பெரும்பாலோனார் வீடுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகின்றனர். தற்போது சில நாட்களாக ஆடுகள் கழிச்சல் ஏற்பட்டு காணப்படுவதாகவும், திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதுவரை மர்மநோய் தாக்கி சுமார் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்தாக கூறப்படுகிறது. கால்நடை மருத்துவர்கள் சம்மந்தப்பட்ட பகுதிக்கு சென்று சிகிச்சை அளிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து ஆலடிபட்டியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியிலுள்ள மக்கள் விவசாய பணிகள் முடிந்த பின்பு பெரும்பாலானோர் ஆடு வளர்க்கும் தொழில் ஈடுபடுகிறார்கள்.

 தற்போது சில தினங்களாக மர்ம நோயால் ஆடுகள் அவதிப்பட்டு திடீர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழக்கின்றன. இதனால் விவசாயிகள் பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் மர்ம நோய் தாக்காமல் இருக்க கால்நடை துறை அதிகாரிகள் கண்காணித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறினார்.

Tags : Shocking Church , Tiruchuli, Goat, Died
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...