×

திண்டுக்கல் அருகே மீன் பண்ணையில் பதுக்கிய 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ஒருவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே மீன் பண்ணையில் பதுக்கிய 9 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம் வழியாக வெளி மாவட்டங்களில் இருந்தும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடந்து வந்தது. இங்கிருந்து கேரளாவுக்கு பலர் அரிசியை கடத்துகின்றனர்.

போலீசார் மற்றும் குடிமை பொருள் தடுப்பு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்ததால் ஓரளவு குறைந்திருந்தது. தற்போது குடிமைப்பொருள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் தேர்தல் பணியில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதை பயன்படுத்தி சிலர் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில், திண்டுக்கல் முத்தனம்பட்டியை அடுத்த திப்பம்பட்டியில் உள்ள மீன் பண்ணையில் பதுக்கி வைத்திருந்த 9 டன் ரேஷன் அரிசி மற்றும் 2 சரக்கு வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக சங்கர் என்பவரை கைது செய்தனர். பதுக்கப்பட்ட அரிசி எங்கிருந்து இருந்து வாங்கப்பட்டது என்பது குறித்து குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Dindukkal , Dindigul,Ration Rice, Fish farm, Seized
× RELATED திண்டுக்கல்லில் பிளாஸ்டிக் பொருட்கள் 70 கிலோ பறிமுதல்: மாநகராட்சி அதிரடி