×
Saravana Stores

கிடப்பில் உள்ள கூடல்நகர் டெர்மினல் திட்டம் மதுரை ரயில் நிலையத்தை தரம் உயர்த்தும் அறிவிப்பு கண்துடைப்பு

மதுரை : மதுரையில் கூடல்நகர் ரயில் நிலையத்தை தரம் உயர்த்தும் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டு, மதுரை ரயில் நிலையத்தை மேம்படுத்துவதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளது கண்துடைப்பு என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.மதுரை ரயில் நிலையம் இடநெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் கூடல்புதூர் ரயில் நிலையத்தை 2வது டெரிமினலாக மாற்ற ஒன்றிய அரசு முடிவு செய்தது. அந்த வகையில் ஆதர்ஷ் ரயில் நிலையமாக கூடல்புதூர் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால், கூடல்புதூர் ரயில் நிலையத்தை தரம் உயர்த்தும் திட்டம் தற்போது வரை கிடப்பில் போட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை தனியார்மயமாக்கும் முயற்சிகளில் ஒன்றிய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதை கண்டித்து ரயில்வே தொழிற்சங்கங்கள், ஒன்றிய அரசு பணியாளர்கள் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 41 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதில், முதல்கட்டமாக தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள மதுரை, கன்னியாகுமரி, புதுச்சேரி, ராமேஸ்வரம், கொல்லம், எர்ணாகுளம் ஆகிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. ஒன்றிய பட்ஜெட்டில் மேம்படுத்தப்படும் ரயில் நிலையங்களுக்கு ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 முழுமையான திட்ட அறிக்கை செலவு மதிப்பீட்டுடன் தயாரிக்கப்பட்டு ரயில்வே வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. அந்த வகையில் பார்க்கும்போது, மதுரை ரயில் நிலைய மேம்பாட்டிற்கு ரூ.275 கோடி நிதி ஒதுக்கீடாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே அறிவித்து பல ஆண்டுகள் கிடப்பில் போட்ட கூடல்புதூரை 2வது டெர்மினல் ஆக்கும் திட்டமே நிறைவேறாத நிலையில் தற்போது மதுரை ரயில் நிலையத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு என்பது கண்துடைப்பாக இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்காக ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags : Kudalnagar Terminal Project ,Madurai Railway Station , madurai, Koodal Nagar, terminal
× RELATED மதுரை ரயில் நிலையத்தில் கூடுதல்...